திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நாகராஜன் அவரது தாயார் மற்றும் குடும்பத்துடன் கடந்த வாரம் 20.01.2024 அன்று சென்னை திநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு வந்த பொழுது அன்று காலை முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை பின் தேடிப்பார்த்து விட்டு அருகே உள்ள காவல் நிலையமான திநகர் பாண்டி பஜார் சௌந்தரபாண்டியன் அங்காடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டது

அதன் பிறகு தாயார் கனகவல்லி அவர்கள் புகைப்படத்தை ஆங்காங்கே ஒட்டப்பட்டு அனைத்து இடங்களில் கொடுக்கப்பட்டு தேடி வந்த நிலையில் 29.01.2024 அன்று காலை வெப்பேரி கமிஷனர் அலுவலகத்திலிருந்து காவல் கரங்கள் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

உடனடியாக அங்கு சென்று காணாமல் போன திருவாரூர் மாவட்டத்தின் தனியார் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் கே.நாகராஜன் அரசவனங்காடு என்ற முகவரி மற்றும் தாயார் கனகவள்ளி பற்றிய முழு தகவல்களை காவல் கரங்கள் குழுவின் காவல் ஆய்வாளர் திருமதி மேரி ராஜூ அவர்கள் முழு விவரங்களையும் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து உயிர் ஒளி காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த கனகவல்லி அம்மையாரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் இவர் தானா என்று பேசி கேட்டறிந்த பிறகு நேரடியாக சென்று அழைத்து வந்து நாகராஜ் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அத்துடன் இரண்டு புடவை ஒரு போர்வை வைத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திநகர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கொடுக்க பட்ட முதல் தகவல் அறிக்கைபடி அம்மா கிடைத்து விட்டார் என்ற தகவலையும் தெரிவித்து வீட்டிற்கு புறப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் காவல்கரங்கள் குழுவினர் உயிர்ஒளி காப்பகத்தினர் மற்றும்

காவல்துறை அதிகாரிகள் AC பசுபதி, Inspector மேரிராஜூ, Sub-inspector புனிதா, மற்றும் பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் துணை காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் அதிகாரிகள் குழு வழி அனுப்பி வைத்தனர். அனைவருக்கும் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நாகராஜன் காவல் துறை சார்ந்த காவல்கரங்கள் மற்றும் உயிர்ஒளி காப்பகத்தினருக்கும் மேலும் தன்னை சார்ந்த நண்பர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *