கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் 18 – வது ஆண்டு விழா .

கிருஷ்ணகிரி மாவட்டம் பேலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பதினெட்டாவது ஆண்டு விழா ( 30.01.2024) அன்று நடைபெற்றது.

கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ். பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் கல்லூரியின் தாளாளர்S. கூத்தரசன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின்முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் தமிழ்நாடு தேர்வாணையம் போட்டித் தேர்வு வினாக்கள் குறித்த வரண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் நூலினை வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினராக நகைச்சுவை மன்னர்; சமூக சேவையாளர்;
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பாலா அவர்கள் கலந்து கொண்டார்.
அவருடைய சிறப்பு உரையில்,மாணவ மாணவியர்கள் கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். பல குரலில் கல்லூரியின் வளர்ச்சிக்கு மேம்பாட்டிற்கும் பல நடிகர்களைப் போல பேசி காட்டினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறை மாணவ மாணவர்களின் நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. விழாவில் நிறைவாக உயிர் தொழில் நுட்பவியல் துறை தலைவி முனைவர் நா. கிருத்திகா அவர்கள் நன்றியுரை கூற இனிதே நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *