மடித்து வைத்த வானம் !

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60

.
நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் இலண்டன் வாழ் பேராசிரியர் ,கல்லூரி துணை முதல்வர் ஆசிரியப் பணியோடு இலக்கியப் பணியும் சேர்த்து செய்து வருபவர் .கதை ,கவிதை, கட்டுரை எழுதிடும் ஆற்றல் மிக்கவர் .சகல கலா வல்லவர் .எழுத்து போன்ற இணையங்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .தனி முத்திரைப் பதித்து வருபவர் .எழுத்து இணையத்தில் கவிதைக்கு பரிசுப் பெற்றவர் .

சமுத்திர சங்கீதம் என்ற நாவலின் முலம் இலக்கிய உலகில் 2005 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தவர் .AIR FIRE & WATER என்ற ஆங்கில நூலில் வேதாரண்யம் உப்பு யாத்திரை பற்றி 2010 ஆம் ஆண்டு எழுதியவர் .கதவு இல்லாத கருவூலம் கவிதை நூல் படைத்தவரின் அடுத்த படைப்பு ‘மடித்து வைத்த வானம் ‘ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .வானத்தை மடிக்க முடியுமா ? என்ற கேள்வி மனதில் எழுந்தது .வானம் போன்று உயர்வான கவிதைகள் எழுதி மடித்து வைத்துள்ளார் என்று பொருள் கொள்ளலாம்

வானம் என்பது காற்றுக் கூட உள்ள வெறும் வெற்றிடம் தான். எல்லையற்றது .அங்கிருந்துதான் அமுத மலை பொழிகின்றது. கவிஞனின் உள்ளம் எனும் வானத்திலிருந்து பொழிவதுதான் கவிதை மலை .உள்ளத்தில் உள்ளது கவிதை .உணர்ந்த உணர்வு கவிதை உண்மையை உரைப்பது கவிதை ,கண்டதைக் காட்சிப் படுத்தும் கவிதை. இப்படிசொல்லப்படும்இலக்கணம் அனைத்திற்கும் பொருந்தும் கவிதைகள் நூலில் உள்ளன .பாராட்டுக்கள்

கவிஞர் இரா .மீனாட்சி அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது .இலக்கிய மணம் வீசும் விதமாக ஸ்ரீ அரவிந்தரின் கவிதை வரிகளுடன் உள்ளது .

இயற்கையை மனிதன் இரக்கமின்றி சிதைத்து வருகிறான் .சினம் கொண்ட இயற்கை சுனாபி என்ற பெயரில் எச்சரித்து சென்றது .இருந்தும் இன்னும் மனிதன் திருந்த வில்லை .சுனாமி கவிதை நன்று .
சுனாமி !

ஏழரை நிமிட சனி !
உலக அமைதி கலைத்த அலை !
எரிமலையின் திரவ வடிவம் !
கடல் உணவை விரும்பி
திரும்பி உண்டது மானுடம் !
மானுட உணவை !
இன்று மட்டும் உண்டது !
அசைவக் கடல் !
கோழி மிதித்து குஞ்சுகள் செத்தன !

கவிதை எழுதுவதற்கு காதல் வயப் படுவது ஒரு காரணம் என்றாலும் அதற்குப் பின் தொடர்ந்து எழுதிட , நிலைத்து நிற்க சமுதாயம் பற்றியும் சிந்திக்க வேண்டும் .இயற்கையை ஒன்றி ரசிக்கவும் தெரிய வேண்டும் .

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் இயற்கை ரசிக்கும் குணம் உள்ளவர் என்பதால் இயற்க்கை பற்றிய கவிதைகள் மிக நன்று. இல்லை பற்றிய கவிதை மிக நன்று .இதோ !

இலை எதிர் காலம் !

இலைப் பெண்ணே …
பூ பாட்டுப் பொருள்
இலை பயன்பாட்டுப் பொருள்
விருந்தானாய் ஒரு நாள்
மருந்தானாய் மறுநாள்
உணவருந்த கலம் அனை
காலமெல்லாம் !
இருந்தும் நியாய காரணமின்றியும்
நாசம் செய்வர் உன்னை தினந்தினம்
அவர் வழி , வலி தர மட்டும் !
இலை அன்னையே !
உலகின் உணவுத் தொழிற்சாலையே
பிராண வாய் வழங்கும் பிரபஞ்சத்தின் உயிர் ஓலை நீ
ஆதலால் நீ அறம் !

ஹைக்கூ வடிவில் உள்ள கவிதை நன்று .இந்தக் கவிதையை தலைப்போடு படித்தால் புதுக் கவிதை .தலைப்பின்றிப் படித்தால் ஹைக்கூ .

மீண்டும் விடுதலை !

ஒரே கையால் வெட்டிச் சாய்த்தேன்
யானை ,குதிரை கொண்ட வெள்ளைப் படையை
சதுரங்கம் !

இன்றைய தமிழ்ப் படைப்பாளிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக வடித்த புதுக்கவிதை நன்று .

தமிழை ஏற்றுமதி செய்ய!
ஏற்று மதி !

சங்கத் தமிழ் அனைத்தும் தா !
பிற மொழியில் !

சங்கம் போல் இன்றும் தா
புதிய தமிழ் !

எழுந்து நின்றது மன்றம் !
ஒளவை சொன்னாள்!

பேசியது ஒளவை அல்ல !

சிலம்பம் வளையமும் !
தரித்தத் தமிழன்னை !

இன்றைய அரசியல் அவலத்தையும் நன்கு சுட்டிக்காட்டி உள்ளார். இன்று அரசியல் என்பது நல்லவர்களுக்கு அந்நியமாகி விட்டது. எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .

ஒழிக !

தோரணம் கட்டணும் !
பாலாபிசேகம் செய்யணும் !
தேர்தல் வந்திருச்சே !
ஓடியாடி உழைக்கணும் !

தலைவர் வாழ்க !

எதிர்க்கட்சி ரவ்டிங்க !
நாலு பெற வெட்டுனாங்க !

நம்ம கட்சி நல்லவன் !
எட்டு சாய்ச்சுப்புட்டான் !

தலைவர் வாழ்க !

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் நம்மை ஆண்ட வெள்ளையர் வாழும் இலண்டன் மாநகரில் கல்லூரியின் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டு தமிழ்ப்பணியும் செய்து வருவதற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *