அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் ஆ.அருள்வேலன் ஜி அவர்களுக்கு சேவா ரத்னா விருது:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் பிறந்த அருள்வேலன் ஜி திருச்சியிலேயே பள்ளி , கல்லூரி படிப்புகளை முடித்தார்.ஆன்மீகம் ஆர்வம் கொண்ட அவர் திருக்கோயில்கள் சார்ந்த பல்வேறு சேவை பணிகளை மேற்கொள்ள அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடங்கி இன்று தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் அந்த பணிகளை திறம்படச் செய்து வருகிறார்.
இவரின் செயல்பாட்டிற்கு பக்கபலமாக சங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்ளனர்.புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் அருள்வேலன் ஜி அவர்களின் சேவைகளை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்
” சேவா ரத்னா ” விருதினை திரு.அருள்வேலன் ஜி அவர்களுக்கு வழங்கி உள்ளது.