மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மதுரை யில் இரு சக்கர வாகனப்பேரணி நடைபெற்றது.
மதுரையில் இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடி யசைத் துத் தொடங்கி வைத்தார். மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், மாவட்ட வரு வாய் அலுவலர் சக்திவேல், கோட்டாட்சியர் ஷாலினி, அரசுத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியரகத்தி லிருந்து தொடங்கிய இந்தப்பேரணி, ராஜா முத்தையா மன்றம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழியாகச் சென்று ஒத்தக் கடை வேளாண்மைக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இதேபோல, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல் லூரி நாட்டு நலப் பணித் திட்டத் தின் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.