பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே இளங்கார்குடி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை ஆலயம் 30-ஆம் ஆண்டு திருவிழா..

500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இளங்கார்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாககன்னிகை உட்பட்ட பரிவார தெய்வங்கள் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
30-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில், காவிரி ஆற்றின் தென்கரையிலிருந்து, மேளதாளம் முழங்க பக்தர்கள் பால்குடம், அழகு காவடி, அக்கினிசட்டி, தொட்டிபாடை எடுத்து முக்கிய வீதி வழியாக வீதியுலா வந்து கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் அழகு காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.