கோவை
வாக்கு சேகரிப்பில் ஈடுபட வந்த கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு இடையர்பாளையம் ஶ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் சார்பாக கும்பாபிஷேக அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை இடையர்பாளையம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக பிரச்சாரம் செய்ய வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையர்பாளையம் ஶ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் சார்பாக கும்பாபிஷேக அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிஆர் வேணுகோபால், மணிகண்ட சிவாச்சாரியார் செந்தில்நாதன் சிவாச்சாரியார், சிவ சூர்யா,சிவகடேஷ், வளர்மதி,நந்திதா, பாலச்சந்திரன் உள்ளிட்ட ஆலைய நிர்வாகிகள் சார்பில் வேட்பாளர் அண்ணாமலைக்கு பூரண கும்பம் மரியாதை செலுத்தப்பட்டது.