சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்டடோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் தொடக்கம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் நூதனமாக பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படைகள் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
வாக்குபதிவை அச்சமின்றி நடத்த இந்திய துணை ராணுவ படைகள், போலீஸார் ஆகியோர் கொடி அணி வகுப்பு நடத்தப்படுகிறது.

இதனிடையே சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்து வாக்களிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சீர்காழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சனாவின் மேற்பார்வையில் வட்டாட்சியர்கள் இளங்கோவன் சண்முகம் தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி ஆகியோர் மேற்பார்வையில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் புத்தூர் மாதானம் திருவெண்காடு ஆகிய ஐந்து பிற்காக களுக்கு இரண்டு வீதம் 10 மண்டலங்கள் அமைக்கப்பட்டு 10 மண்டல அலுவலர்கள் வாக்குப் பதிவுக்கு தேவையான சீல் இடப்பட்ட தபால் வாக்குப்பெட்டி, மற்றும் மை உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது.

முன்னதாக அஞ்சல் வாக்கு பெட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் காலியாக உள்ளதை உறுதி செய்யப்பட்டு பின்னர் பூட்டி சீல் இடப்பட்டு மண்டல அலுவலர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு 10 வாகனங்களில் அந்தந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சீர்காழி தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 641 பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *