பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன்ஒருபகுதியாக, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் / அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கத்தை ஆதரித்து அவருக்கு வாக்குகள் சேகரித்து பரமத்தி நகரில் உள்ள மூன்று சாலை சந்திப்பு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அண்ணாமலை பேசுகையில்,

2024 பாராளுமன்ற தேர்தலில் , மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக கே.பி ராமலிங்கம் போட்டியிடுகின்றார். மூத்த நிர்வாகி என்பதால் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது.
மூத்தவர்களுக்கு அனுபவம் அதிகம் அதனால் தான் சீட் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர், கலைஞர் அவர்களின் அன்பை பெற்றவர்.

பிரதமர் மோடிக்கு நன்கு தெரிந்தவர் கே.பி.ராமலிங்கம்.

இராமலிங்கத்தை அறிவித்தவுடன், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு கட்சி வேட்பாளரை மாற்றிவிட்டது.
களத்தில் நின்று கொண்டிருக்கும் கட்சி பாஜக.

நாமக்கல் லாரி, சரக்கு போக்குவரத்து, முட்டை, கைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்கி இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3 முறையாக ஆட்சி அமைக்கபோது யார் என குழந்தையிடம் கேட்டால் மோடி தாத்தா என சொல்லும். ஒவ்வொரு வாக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கான வாக்கு ஆகும்.

திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என தெரியாமலேயே தேர்தலை சந்திக்கின்றனர். யார் பிரதமர் தெரியாமல் இருக்கும் நிலையில் அந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்கு அளிக்க வேண்டுமா ?
தேர்தலில் யார் பிரதமர், முதலமைச்சர் என தெரிந்து கொள்வது அவசியம்.

இந்தியா கூட்டணிக்கு செலுத்தும் வாக்கு உதவாத வாக்கு.

திமுக முதலமைச்சர், அமைச்சர்கள் செய்ய முடியாத திட்டத்தை திமுக எம்.பி செய்ய முடியுமா ? பாஜக எம்.பி இருந்தால்தான் மாற்றத்தை கொடுக்க முடியும். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் அனுபவம் மிக்கவர்.
பாராளுமன்றத்தில் பேசி பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார்.

திமுகவினர் 33 மாத ஆட்சிக் காலத்தில் எந்தவித திட்டங்களையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தவில்லை.

திமுக பிரச்சாரத்தில் மோடியை 29 பைசா என கூப்பிடுவோம் என உதயநிதி பேசுகிறார். கஞ்சா போதைப்பழக்கம் மிகுந்தது தமிழ்நாட்டை உருவாக்கியதால் அவரை போதை அமைச்சர் என கூப்பிடலாமா?

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் வருடம் தோறும் ரூ. 6 ஆயிரம் நிதி உதவியை 85, 505 விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு மகளிர்க்கு சிலிண்டர் எரிவாயு, 11 மருத்துவக்கல்லூரி, மேம்பாலம், முத்ரா திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம், குடிநீர் திட்டம் மூன்று வயசு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. நேரடியாக மக்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தும் நிதியை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசு குறைவாக நிதி தருவதாக மக்களை ஏமாற்றுகின்றனர். காரணம் அந்தத் தொகையில் ஊழல் செய்ய முடியாது என்பதால். தமிழகத்தில் திமுக கட்சி
தாத்தா , அப்பா பெயரை வைத்து அரசியல் செய்கின்றார்.

தமிழ்நாட்டில் எல்லா பகுதியிலும் கஞ்சா விற்பனை. சமீபத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியின் படத்தை தயாரித்தவர் ஜாபர் சாதிக் உதயநிதி ஸ்டாலினுக்கு கஞ்சா என பெயர் வைக்கலாமா ?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பால், சொத்துவரி உள்ளிட்ட அனைத்து விலைவாசியும் உயர்ந்து விட்டன.
விடியல் ஆட்சி கொடுக்கின்றேன் என நம்மளை எல்லாம் சுடுக்காட்டு அனுப்புகின்றார்.

அரசின் நிர்வாக திறமையின்மையால், மணல் திருட்டும் அதன் தொடர்ச்சியாக நடைபெறுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடும் அடைந்துள்ளது.

சட்ட ஒழுங்கு சீர்கெட்டு ஏற்பட்டுள்ளதால்
திமுகவிற்கு வாக்கு அளித்தால் அது பாவ வாக்கு ஆகும்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக 511 நிறைவேற்ற வில்லை. முழுமையாக 20 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக தமிழக முதல்வர் உண்மைக்கு மாறான தகவலை கூறி வருகிறார்.

பாஜக 2019 பாராளுமன்ற தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றி விட்டோம். ஆர்டிகல் 370 நீக்கம், இராமர் கோவில் கட்டுவோம், நீர் மேலாண்மை உயர்த்துவோம் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல கஷ்டமான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இதனை முன்னுறுத்திய நாங்கள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்கிறோம்.

1974 இல் காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதால் இந்தியாவின் எல்லை சுருங்கிவிட்டது.

திமுகவினர் சொன்னார்கள் பாராளுமன்றத்தில் கச்ச தேவை கொடுக்க வேண்டாம் என சண்டை போட்டோம் என்றும் இந்திரா காந்தி கொடுத்து விட்டார் என்றும் கூறுகின்றனர். எனவே, மீனவர்களின் நலன் கருதி பாஜக, கச்சத்தீவை மீட்கும் வரை போராடும்.

எல்லா கிராம பகுதிகளுக்கும் பாஜகவினர் சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். திமுகவின் பொய் வாக்குறுதிகளை முறியடிக்க வேண்டும். வேளாண்மைச் தொழிலுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பெண்களுக்கு அதிகாரம் அளித்து மோடி ஆட்சி நடத்தி வருகிறார். இளைஞர்களின் கனவை நனவாக்க மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பரமத்தியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசினார்.

இந்த பிரச்சார நிகழ்ச்சியில் பாஜக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *