நாகை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ்யை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் திறந்த வேனில் நின்றபடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது எனது சொந்த ஊரில் பிரச்சாரம் மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. கியாஸ் சிலிண்டர் கடந்த 10 ஆண்டுகள் முன்பு ரூ.450 விற்னை செய்தது ரூ.1200 விலை உயர்ந்தது பா.ஜனதா அரசு தான் என்பதை புரிநது கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மகளிர் சிறப்பு பரிசு என சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்துள்ளார். இதனை கண்டு மக்கள் ஏமாற கூடாது, நிச்சயம் ஏமாற மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.

இந்தியா கூட்டணி ஜெயித்தால் கியாஸ் விலை ரூ.500 ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70 ஒரு லிட்டர் டீசல் ரூ.65 தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளும் அகற்றப்பட்டு மத்திய அரசுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. நிச்சயம் செய்வார் அது உங்களுக்கு தெரியும். பா.ஜனதா அரசு தமிழ்நாட்டிற்கு எதையும் செய்ய வில்லை. புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது தமிழ்நாட்டிற்கு வராத பிரதமர் நரேந்திரமோடி, தற்போது தேர்தல் வருவதால் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திலே வீடு எடுத்து தங்கினாலும் ஒரு தொகுதியிலும் தி.மு.கவை ஜெயிக்க முடியாது. ஏனேன்றால் தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதைகாரர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள்.

இனி பிரதமர் மோடி என்று பெயர் சொல்லி அழைக்க கூடாது அதற்கு பதிலாக மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் அதுவும் செல்லா காசுதான் அவ்வாறு கூறி அழைப்பதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.டி. வரி மூலம் 1 ரூபாய் மத்திய. அரசு செலுத்தினால், ஆனால் திரும்பி தருவது 29 பைசா மட்டுமே தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது

நம்முடைய மொழி உரிமை, கல்வி உரிமை நிதி உரிமை மத்திய அரசிடம் அடகுவைத்து அடிமை அ.தி.மு.க. அரசு தான் அதை எல்லாம் மீட்க வேண்டும் என்றால் ஒரு வழி வருகிற 19-ந் தேதி அனைவரும் வாக்கு சாவடி மையத்திற்கு சென்று நமது கூட்டணி வேட்பாளர் வை செல்வராஜ் க்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் பொறுப்புகளை எடுத்து உழைத்தால் தான் மகத்தான வெற்றி பெற முடியும் என கேட்டுக்கொண்டார்

தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே கலைவாணன் முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை ஏ அசோகன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் திருவாரூர் நகர கழக செயலாளர் வாரை பிரகாஷ் திருத்துறைப்பூண்டி நகரக் கழக செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் நகர மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் இரா சங்கர் எஸ் என் அசோகன் ரஜினி சின்னா வரதராஜன் உள்ளிட்ட அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமான பெண்கள் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *