சேரன்மகாதே வியில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்று வீட்டு வாசலில் பேனர் வைத்த டெய்லருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள னர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர் தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப் பதை வலியுறுத்தியும், சட்ட விரோத மாக ஓட்டுக்கு பணம் பெறுவதை தடுக்கவும் பல்வேறு வகையில் விழிப்பு ணர்வு நடவடிக்கைகளில் இந்திய தேர் தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும்

ஒவ்வொரு வாக்காளர்களும் இந்த கொள்கையை பின்பற்றுவது என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது. இதற்கு முன்னுதாரணமாக சேரன்ம காதேவியை சேர்ந்த டெய்லர் தனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அண்ணாநகர் பகு தியை சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் சாமுவேல் செல்வின் (53). டெய்லரான இவர் சேரன்மகாதேவி சப்கலெக்டர் அலுவலகம் அருகே டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் தனது ஜன நாயக கடமையை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து 5வது முறையாக தனது வீட்டு வாசலில், ‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என பேனர் வைத்துள்ளார். அதில், வாக்கு எங் கள் உரிமை,வாக்களிப்பது எங்கள் ஜனநாயக கடமை என குறிப்பிட்டு எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என குறிப்பிட்டுள்ளார். இது சேரன்ம காதேவியில் இளம் தலைமுறையின ரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. டெய்லர் சாமுவேல் செல்வினின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப் பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *