பெருமை மிக்க நமது இந்திய திருநாட்டில் வாழ்கின்ற தொன்மையான தமிழர்களாகிய நமது ஒரே புத்தாண்டு என்பது , சித்திரை 1 ஆம் தேதி கொண்டாடப்படுகின்ற புத்தாண்டு தான்.

இப்பொழுது பிறக்கின்ற இந்த தமிழ் புத்தாண்டு மக்களுக்கு கிடைத்த ஓட்டு அதிகாரம் என்கிற ஆயுதம் கிடைத்த ஒரு வரமான ஆண்டு. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற பழமொழிக்கு இணங்க , கடந்த ஆண்டில் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லை என்று மத்திய அரசு அறிவித்த ஆண்டு, புதுவையில் மக்கள் நலன்களுக்கு எதிராக நடக்கும் ஆட்சி , அதன் விளைவாக மின் மீட்டர் பொருத்தும் பணி, புதுவை கலாச்சாரத்தை சீரழிக்கும் ரெஸ்டோ பார் திறந்தது,

புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்தது , ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் படுதும் ரேஷன் கடையை திறக்காமல் மக்களை.வஞ்சித்தது, அரசு சார்பு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் போடாமல் இருந்தது, 100 நாள் வேலை திட்டத்தை 20 நாளாக குறைத்து கிராமப்புற தொழிலாளிகளை வஞ்சித்தது, விவசாயிகளுக்கு அறிவித்த கடன் தள்ளுபடி மற்றும் மானிய தொகையை கொடுக்காமல் ஏழை விவசாய குடும்பத்தை அழிப்பது போன்ற மத்திய மாநில அரசுகளின் துஷ்பிரயோகங்களை தகர்த்தெறிய , கசப்பான சம்பவங்களை தடுக்க , ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர இந்த தமிழ் புத்தாண்டில் மக்களுக்கு பாராளுமன்ற தேர்தல் மூலம் கடவுளே நமக்கு இயற்கையாக வாக்குரிமை என்கிற ஆயுதத்தையும் அதிகாரத்தையும் கொடுத்துள்ளார்.

இந்த வாய்ப்பினை பயன் படுத்தி , தாங்கள் ஜனநாயக கடமையாற்றி , இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் , நலன்களையும் கொண்டு வரவும், பழைய கசப்பான சம்பவங்களை நினைவு கூர்ந்து , பிறக்கும் வருடத்தை வருடமாக நினைக்காமல் புதிய வாழ்க்கையாக சிந்தித்து செயல்பட்டு ஒளிமயமான எதிர்காலம் உருவாக்கி , இன்புற்று வாழ வேண்டும் என்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, மனதார வாழ்த்துகிறேன்.

R.L.வெங்கட்டராமன்.
சேர்மன் ,
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம்.
புதுச்சேரி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *