இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பு.

இந்தியா கூட்டணி கட்சி சார்பாக நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள தோழர் வை.செல்வராஜ்
வேட்பாளராக களத்தில் உள்ளார்.

வெற்றி வேட்பாளர்
வை.செல்வராஜை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பாக திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரத்தில் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் அமைக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு அரங்கத்தில் நாகை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜை மற்றும் தஞ்சை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் ச.முரசொலி ஆகியோரை அறிமுக படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் நடைபெற்றது.
வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் உரையாற்றிய அன்றே இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வெற்றி நிச்சயம் என உறுதியானது.

மேலும் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
ஜி.ராமகிருஷ்ணன் திருத்துறைப்பூண்டி நடைபெற்ற மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பரப்புரையில் எழுச்சியாகத் திரண்டு இருந்த விவசாய பெருங்குடி மக்கள், தொழிலாளர் வர்க்கத்தினர் என வெள்ளம் என திரண்டிருந்த பொது மக்களின் எழுச்சிமிக்க கூட்டத்தின் வாயிலாக கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.செல்வராஜ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 354 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதை விட தற்போது நாகை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளராக போட்டிடும் வை.செல்வராஜ்
3 லட்சம் வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றி உறுதி என நிச்சயிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டும் வருகின்றனர். இதில் சிபிஎம் மாநில செயலாளர்
கே.பாலகிருஷ்ணன்,
சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று தேர்தல் பரப்புரை காரணமாக மிகப்பெரிய வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மாநில,மாவட்ட தலைவர்கள் தேர்தல் களத்தில் தினந்தோறும் பரப்புரை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது
திருவாரூர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தனித்தன்மையாக மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் ஆகியோர் தலைமையில் நாகை நாடாளுமன்ற தொகுதி திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, நன்னிலம்,மன்னார்குடி என 4-சட்டமன்ற தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வீடு, வீடாக சென்று தேர்தல் பரப்புரை உற்சாகத்துடன் எழுச்சியாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் திருவாரூர் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக உள்ளார். திருவாரூர் ஒன்றியம்,நகரப் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் மக்களை நேரடியாக சந்தித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருத்துறைப்பூண்டி
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
சி.ஜோதிபாசு திருத்துறைப்பூண்டி தேர்தல் பணி குழு பொறுப்பாளராக உள்ளார். திருத்துறைப்பூண்டி தெற்கு, வடக்கு,திருத்துறைப்பூண்டி நகரம், கோட்டூர்,முத்துப்பேட்டை நகரம்,ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர் தலைமையில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நன்னிலம்
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் நன்னிலம் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக உள்ளார்.
நன்னிலம் ஒன்றியம் பேரளம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி மன்னார்குடி தேர்தல் பணி குழு பொறுப்பாளராக உள்ளார். மன்னார்குடி ஒன்றியம்,நகர பகுதி ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி,நீடாமங்கலம் உள்ளிட்ட
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி நாகை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜூக்கு கதிர் அருவாள் சின்னத்தில் மிகப்பெரிய வெற்றிய வழங்கிட வேண்டி பிரச்சாரம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் களத்தில் சிபிஎம் கட்சியின் மாவட்ட,ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் முதல் உறுப்பினர் வரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிஐடியு மாவட்ட குழு சார்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் கதிர் அரிவாள் சின்னத்திற்கு தொடர்ந்து வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *