பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை.

பொள்ளாச்சி

அமைச்சர் உதயநிதியை வரவேற்கும் விதமாக நகர இளைஞரணி சார்பில் JCB இயந்திரம் மேல் நின்று பூக்களை தூவி அமைச்சர் உதயநிதியை வரவேற்றனர்
சிறப்பான வரவேற்பை கொடுத்த உங்களுக்கு நன்றி. மற்ற இடங்களில் மலர் தூவி வரவேற்பார்கள் ஆனால் இங்கு பூவால் அடித்து வரவேற்றிருகிரீகள்.
தாய்மார்கள் முடிவெடுத்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது.
நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வேட்டு. தமிழக மக்கள் யாரும் அவரை மதிப்பதில்லை, தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே தமிழகம் வருகிறார் மோடி.
இந்த தேர்தலில் குறைந்தது 3லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈஸ்வரசமியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
கேரளா வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்றி புதிய கன்றுகளை நட 14கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற கலைஞர் வழியில் வந்த நம் தளபதி சொன்னதை நிறைவேற்றுவார்.
அனைமலையர் நல்லார் திட்டம் நிறைவேற்றப்படும்.
நியாய விலை கடை வாயிலாக தேங்காய் எண்ணெய் விர்ப்பது குறித்த விஷயங்களை ஆலோசனை செய்ய கூடும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு கியாஸ் ஸ்லிண்டர் விலை 400 ரூபாயில் இருந்து 1,100ஆக உயர்ந்தது. கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றால் கியாஸ் விலை 500குறைக்கப்படும்.
மக்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றவர் நம் முதலமைச்சர்.யார் காலிலும் விழுந்து முதலமைச்சர் ஆகவில்லை. ஆனால் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆகிவிட்டு அவர் காலையே வாரி விட்டவர்.
தேர்தல் முடிந்த முதலமைச்சர் ஆனவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் நம் முதல்வர்.
இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 400 கோடி பெண்கள் இலவசமாக பேருந்தில் பயனம் செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் 31ஆயிரம் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு 3லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 80,000 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
கடும் நிதி நெருக்கடி இருந்தும் தகுதி உள்ள மகளிர்க்கு கடந்த எட்டு மாதத்தில் 1கோடியே 18 லட்சம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பெண்களுக்கு மகளிர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் நிவாரண நிதி அனைவருக்கும் நிதி உதவி வழங்கினார் தளபதி. மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகையாக 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *