மணப்பாறை அருகே நகை அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை.

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சேர்ந்தவர் அருள்பிரகாசம் (54). மணப்பாறை மலையாண்டி தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் தாமஸ் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களது வீட்டில் கோடிக்கணக்கான பணம் பதுக்கிவைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார் சென்றது.

இதனையடுத்து, திருச்சி வருமான வரித்துறை அதிகாரி ஜெகதீசன் தலைமையில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று இரவு 10 மணிக்கு தீராம்பட்டியில் உள்ள அருள்பிரகாசம் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்தவர்கள் வருமான வரித்துறையினரை உள்ளே விட மறுத்ததால், மணப்பாறை போலீசாருக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூறிய பின்னர். வீட்டினுள் சோதனையிட சென்ற வருமானவரித் துறையினர் இரண்டு மணிநேரத்திற்கு மேல் சோதனையிட்டதோடு, அருள்பிரகாசம், அவரது மனைவி சூசை மேரி, மகன் தாமஸ் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

பின்னர், பணம் எதுவும் சிக்காத நிலையில், வீட்டை விட்டு வெளியில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகுமாறு சம்மன் வழங்கிச் சென்றனர். இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *