பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரியின் டிரைலர் மற்றும் இரும்பு காயில் கவிழ்ந்து விபத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவையிலிருந்து தோகை மலைக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பைப்பு தயாரிப்பதற்காக 31 டன் அளவிலான காயில் கொண்டு செல்லப்பட்டது

லாரியை சுபாஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார் லாரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எம்ஜிஆர் சாலை பிரிவில் உள்ள வளைவை கடக்க முயன்ற போது எடை தாங்காமல் லாரியின் ட்ரைலரிலிருந்து இரும்பு காய்களும் சரிந்து சாலையில் விழுந்தது இதில் டாரஸ் லாரியின் பொருத்தப்பட்டிருந்த டிரைலரும் சாலையில் கவிழ்ந்தது இது குறித்து தகவல் அறிந்து பல்லடம் போலீசர். உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று லாரியின் ட்ரைலர் மற்றும் இரும்பு காய்களை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்த முயன்றனர் இருப்பினும் காயலின் எடை அதிகமாக இருந்ததால் கிரேயின் மூலம் இரும்பு காயிலை நகர்த்த முடியவில்லை இருப்பினும் லாரி மற்றும் லாரியின் ட்ரைலர் கிரேனின் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர்

மேலும் இரும்புக்காயிலை அப்புறப்படுத்த கோவையிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை இருப்பினும் சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி சேதமடைந்தது அதேபோல் பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது இதன் காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *