கடையநல்லூரில் உயர் கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு கூட்டம்;-

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் திருநெல்வேலி மனித உரிமை களம் மற்றும் அகம் பவுண்டேசன், இணைந்து உயர் கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பம்மாள் தலைமை தாங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர் சித்ரா முன்னிலை வகித்தார்.

மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் இயக்குனரும், அகம் பவுண்டேசன், மாநில அமைப்பாளருமான பரதன் உயர் கல்வியின்
அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அவர் பேசும்போது
12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் என்ன கோர்ஸ் எடுத்து படிக்கலாம் என்றும், படித்து முடித்த பிறகு என்னென்ன வேலைக்கு போகலாம் என்றும்
பண வசதி இல்லை என்ற காரணத்தி னால் உயர் கல்வி படிக்காமல் இருக்க வேண்டாம். உயர் கல்வி படிப்பதற்கு பணம் ஒரு தடையல்ல. அகம் பவுண்டேசன் மூலமாக மாணவர்களை மருத்துவ படிப்பு, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில் நுட்ப கல்வி,. நர்சிங் போன்ற படிப்புகளை படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறேன் என்று பேசினார்.

இறுதியாக மனித உரிமை களம் பணியாளர் வேலம்மாள் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை மனித உரிமை களம் பணியாளர் தங்கம் செய்திருந்தார்

இதில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மனித உரிமை களம் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *