வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம் செடில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இவ்வாண்டு கடந்த 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதுடன் விழா தொடங்கியது,

தினசரி இரவு அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. கடந்த 21 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்தில் அம்மன் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

முதலே பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை பால் காவடி பால்குடம் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து செலுத்தினர். மாலை மூணு மணி அளவில் அம்பாள் அன்ன பட்சி வாகனத்தில் வீதி உலா காட்சியும் நடைபெற்று ஆலயம் வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து செடில் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு எட்டு மணிக்கு சந்திரசேகரபுரம் 4″ C நண்பர்கள் வழங்கும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் இசைக்குயில் சுகந்தி மற்றும் கிராமியக்குயில் தேன்மொழி மற்றும் சென்னை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பங்கு பெரும் எஸ். போஸ் மற்றும் பிரியரஞ்சனி ஆர்கெஸ்ட்ரா நடைபெற்றது.

22 -ம் தேதி திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விளையாட்டுடன் அம்பாள் வீதி உலா காட்சியும், இரவு எட்டு மணிக்கு அரிச்சந்திரா மயான காண்டம் புராண நாடகம் நடைபெற்றது. இன்று 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், 27 -ம் தேதி சனிக்கிழமை வரை இரவு ஒன்பது மணிக்கு பெரிய திரையில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

வருகின்ற 28 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மங்கள வாத்திய இசையுடன் விடையாற்றி விழாவும், இரவு அம்மன் புஷ்ப பல்லக்கு வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சந்திரசேகரபுரம் கிராமவாசிகள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *