கழனிவாசல் (TNCSC) நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஓகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் இரண்டாவது முறையாக நெல் கொள்முதல் நிலையம் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.

இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இங்கு விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் அதிகமாக வசூல் வேட்டை நடத்துவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இது பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தில் பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

இதனால் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டமாகவே கருதப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நெல் மூட்டைகள் எடை போட்டு விடலாம் அதற்கான தொகை அவருடைய அக்கோண்டிற்கு வந்துவிடும்.

இதனால் இடைத்தலைவர்களுக்கு எதும் பணம் கொடுக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு இடங்களில் விதிகளுக்கு மாறாக விவசாயிகளிடம் வசூல் வேட்டை நடந்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

அந்த வகையில் கழனிவாசலில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் பார்வையாளராக வேப்பந்தட்டையை சேர்ந்த  முனிசாமி என்பவரும், ஹெல்ப்பராக வதிஷ்டபுரத்தைச் சேர்ந்த தனம் என்பவரும், வாட்ச்மேனாக அத்தியூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள்.

 இந்த மூவர் கூட்டணி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் என்று கொள்ளை அடிக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு பல்லாயிரம் ரூபாய்  சுருட்டப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றார்கள்.

 அதோடு கூடுதலாக பணம் கொடுத்தால் அவர்களுடைய நெல் உடனடியாக எடைப்போடப்படும் என்றும், வருகின்ற விவசாயிகளிடம் டீ வாங்கி வா, வடை வாங்கி வா என்றும் தொந்தரவு செய்வதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.

   மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இந்த மூவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்த போவதாகவும் பேசப்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் அவர்கள் உடனடியாக கழனிவாசலில் இயங்கி வரும்  நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும்  மூவர் கூட்டணியை உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *