பெரியபாளையத்தில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின்2.ஆண்டு நினைவு அஞ்சலி, குருபூஜை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் குருபூஜை விழா ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பா. சுகுமாரன் தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் சிறப்பாயப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே. எம.டில்லி கலந்துகொண்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மோகன், சிவக்குமார், முருகானந்தம், செந்தில்குமார்,சேகர், சௌந்தர்,புஷ்பலதா, நாராயண மூர்த்தி,வேலு, மோகன், செல்வராஜ், சுரேஷ்,சங்கர்,கோபால், பாபு ராவ்,ராஜேந்திரன், விண்ணரசு,ரவி, ஜெயச்சந்திரன், சாமிநாதன்,பாபு,அன்பு, சங்கர், ராம் சுப்ரமணியம், சத்யநாராயணன்,சுதாகர்,ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சீனிவாசன்