மதுரை எம்.பி. வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,
ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளின் திறப்பு விழா…..

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி.யின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது மதுரை மாநகராட்சி வார்டு – 23 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி ஊழியர்களுக்கான ஓய்வு அறை ,
வார்டு – 55 பூந்தோட்டம் மற்றும் அண்ணாத்தோப்பு இரண்டு ரேஷன் கடைகள் கட்டிடங்கள்.

வார்டு – 44 பாலரெங்காபுரம் மருத்துவமனை அருகில் புதிய சத்துணவு மையக்கட்டிடம், வார்டு – 86 வில்லாபுரம் மெயின் ரோடு போர்வெல் சிண்டக்ஸ் தண்ணீர் தொட்டி ஆகியவை களை மக்கள் பயன்பாட்டிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன்,மதுரை மாநகராட்சி (பொ) மேயர் நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல், விஜயா குரு, மாயழகு தமிழ்ச்செல்வி மற்றும் இதில் சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நரசிம்மன், ரமேஷ், ஸ்டாலின்,சசிகலா,பகுதி குழு செயலாளர் கோட்டைசாமி, கோபிநாத், லெனின், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவா, இந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் திலகர், பி. விஜயா, சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் அழகான வேலையை தொடங்கி தலைவர் மீனாட்சி சுந்தரம், பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம்,
ம.தி.மு.க மாவட்ட செயலாளர் முனியசாமி, தி.மு.க மாவட்ட பொருளாளர் முருகவேல், பகுதி செயலாளர் ஆர். எம்.முத்து, திமுக வட்டச் செயலாளர் கர்ணா
காங்கிரஸ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: இன்றும் நாளை மறுநாளும் சேர்த்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து மதுரை மாநகராட்சிக்குள் சுமார் 14 பணிகள் 97 லட்ச ரூபாய் மதிப்பீடுகளில் உருவாக்கப்பட்டு இருக்கிறது

அவற்றினுடைய திறப்பு விழாக்களை இப்பொழுது நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினருக்கான நிதி என்பது மிக மிக குறைந்தது சட்டமன்ற உறுப்பினருடைய தொகுதி மேம்பாட்டு நிதிய ஒப்பிடுகிற பொழுது ஒரு தொகுதிக்கு மூன்று கோடி ரூபாய் சட்ட மன்ற உறுப்பினருக்கு ஆறு தொகுதிக்கும் சேர்த்து ஐந்து கோடி ரூபாய் தான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கிறது. அதை வைத்து தான் மக்களுக்கு மிக மிக தேவையான விஷயங்களை எல்லாம் இந்த நிதிகளில் நாங்கள் செய்து வருகிறோம். இன்றைக்கு இங்கே வந்து இரண்டு ரேஷன் கடை இந்த பகுதியினுடைய மிகப்பெரிய தேவையாக இருந்தது அதை இப்பொழுது திறந்து வைத்திருக்கின் றோம். இதனுடைய தொடர்ச்சியாக இந்த 14 பணிகளையும் திறந்து வைக்க இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *