மதுரை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்புத் திட்டம் கோமாரி நோய் 8வது சுற்று தடுப்பூசி முகாம்,மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலந்துார் ஊராட்சி மாரணி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உத்தரவின்படி, மதுரை, மண்டலஇணைஇயக்குநர் டாக்டர் ராம்குமார் மற்றும் துணை பதிவாளர் பால்வளம், சுரேஷ், இணைந்து முகாமை துவக்கி வைத்தனர்.
கால்நடைபராமரிப்புத்துறை, மதுரைகோட்டஉதவிஇயக்குநர், டாக்டர் ஜான் சுரேஷ்தாசன், மதுரைமாவட்ட,கால்நடைநோய் புலனாய்வுபிரிவு உதவி இயக்குநர், டாக்டர் உமாமகேஸ்வரி, மதுரை ஆவின் உதவி பொது மேலாளர் டாக்டர் பாலயோகினி, மற்றும் அழகர்ராஜா,கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 150 மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாட்டினங்களுக்கான சிகிச்சை மற்றும் தாது உப்பு வழங்குதல் ஆகிய இதர பணிகளும், கால்நடைமருத்துவக்குழு,டாக்டர் பிரேமா, டாக்டர் ராமலெட்சுமி, டாக்டர் பியூலா, டாக்டர் ரமேஷ், நடமாடும்கால்நடை மற்றும் மருத்துவ ஊர்தி,கால்நடை ஆய்வாளர்கள் ஜெயந்தி, மகாலெட்சுமி, கோவிந்தன், மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்-திருமதி.தமிழ்செல்வி, வாசு, வேல்முருகன், ஆகியோரால் மேற்கொள்ளப் பட்டது.
கோமாரி நோய்க்கான மூலிகை மருத்துவக்கண்காட்சி அமைககப்பட்டு, மரு.ஓவியா,மதுரை,கால்நடை நோய்புலனாய்வு பிரிவு, கால்நடை உதவி மருத்துவரால், கால்நடை வளர்ப்போர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.கோமாரி தடுப்பூசி முகாம் 29.12.2025 முதல் 28.01.2026 வரை மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது.