கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த ப்பகுதியில்  சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு,மலேரியா, எய்ட்ஸ் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. கொசுவினால் பரப்பப்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்காக தங்களுடைய இருப்பிடம் ,வியாபார ஸ்தலம் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுமாறு கலைக்குழு நிகழ்ச்சியின் ஆடல் பாடல் மூலமாக தெரிவித்தனர். மேலும் முறையற்ற உறவுகளின் மூலம் எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறது? அதை தடுக்கும் விதம் எப்படி? மற்றும் ஒரு முறை உபயோகித்த ஊசியை மீண்டும் மீண்டும் உபயோகிப்பதன் மூலம் எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறதுஎன்பது பற்றியெல்லாம் கலக்குழுவினர் விளக்கமாக பொதுமக்களுக்கு தங்கள் கலைக்குழுவினரின் மூலமாக எடுத்துக் கூறிப் புரிய வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *