ராமநாதபுரம் மாவட்டம் தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதன் அவர்களின் தலைமையில், கமுதி ஒன்றியம் சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, சாதி, மத, வேறுபாடுகளை மறந்து சமத்துவமும் ஒற்றுமையும் வலியுறுத்தும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கொள்கை என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழா அமைந்தது.சமத்துவ பொங்கல் விழா, மக்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நல அரசியல் பயணத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.