போடிநாயக்கனூரில் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கூண்டோடு விலகி அண்ணா திமுகவில் இணைந்தனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில்
தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில்
கொள்கை பரப்பு துணைச்செயலாளர் வி.டி.நாராயணசாமி முன்னிலையில்
போடி வடக்கு நகரச் செயலாளர் எல்.வாசு ஏற்பாட்டில் போடி நகரின் அதிமுக உரிமை மீட்பு குழு ஒ.பி எஸ் அணி நிர்வாகிகள்,போடி நகராட்சி நகர் மன்ற 6-வதுவார்டு கவுன்சிலர் எஸ்..கலைச்செல்வி சேகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஏ.கே.டி.பழனிவேல் அண்ணா தொழிற்சங்க கட்டுமானப் பிரிவு மாவட்ட பொருளாளர்
ரவிச்சந்திரன் உள்பட 100 க்கு மேற்பட்ட கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் கூண்டோடு விலகி தாய் கழகமான அண்ணா திமுக வில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் நகர அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .