தை அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்.
தூத்துக்குடி தை அமாவாசை முன்னிட்டு புதிய துறைமுகம் கடற்கரையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு குவிந்தனர். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் முதலில் கடலில் நீராடினார்கள் அதன் பின்பு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் புதிய துறைமுக கடற்கரையில் தை அமாவாசை முன்னிட்டு குவிந்துள்ளனர் இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்