மதுரை புது ஜெயில் ரோடு நியூமில் காலனியில் குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் நடந்த 77வது குடியரசு தினவிழாவில் 1 ம்பகுதி சி.பி.ஐ.எம். செயலாளர் பாண்டி தலைமை தாங்கி தேசீயக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி சிறப்புரை யாற்றினார்.
நியூமில் காலனி குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் நல சங்க இணை செயலாளர் நித்தியானந்தம், செயலாளர் ஷியாம் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினரை வரவேற்று பொன்னாடை வழங்கி கௌரவித்தனர்.
பொருளாளர் ஏஞ்சல் தவச்செல்வி குடியரசு தினம் குறித்து பேசினார். விழாவில் கமிட்டி உறுப்பினர்கள் இந்திராணி, கோபிநாத், செல்வி, துணைத்தலைவர் ராஜசேகர், டேனியேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு, குழந்தைகளுக்கு பென்சில் , பேனா போன்ற எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நியூமில் காலனி குடியிருப்போர் நல சங்க தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.