பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய திருநாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தையொட்டி பேரூராட்சி செயல் அலுவலர் இரா. குணாளன் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம் இந்திய திருநாட்டின் தேச பிதா மகாத்மா காந்தி திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து விழாவில் பங்கேற்ற பேரூராட்சி மஸ்தூர் பணியாளர்கள் குடிநீர் திட்ட பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வே. நாகராஜ் துணைத் தலைவர் ராதா ராஜேஷ் பேரூராட்சி தலைமை எழுத்தர் சுப்பிரமணி இளநிலை உதவியாளர் வளர்மதி துப்புரவு ஆய்வாளர் சங்கீதாமற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்