விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர். எஸ்.வாசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பிறகு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை சேர்மன் நஜீரா பேகம் தமின் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சண்முகம், கார்த்திகேயன் , திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன். ஒன்றிய கவுன்சிலர்கள் , கலைராஜன் , சிவரஞ்சனி ராஜாமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் , நாராயணன், கணக்காளர் சேதுராமன், காசாளர் வெங்கடேசன், அலுவலக உதவியாளர்கள் குணசேகரன், ராகுல், நித்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர்
ஜோதி நன்றி கூறினார்.