திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் துணை பி டி ஓ கதிர்வேல் தலைமையில் ஊராட்சி செயலர் ஸ்டாலின் பிரபு முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வடுகபாளையம் கிராமத்தில் இச்சிப்பட்டி கிராமத்தில் 55 ஏக்கர் பரப்பளவில் கௌரி ஸ்டீல் சென்ற இரும்பு உருக்கு ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கௌரி ஸ்டில்ஸ் இரும்பு ஆலைக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் இரும்பாலையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தை அறிந்த குண்டடம் பிடிஓ நாகலிங்கம் மற்றும் துணை பி டி ஓ முருகன் சம்பவ இடத்திற்கு வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
சம்பவத்தை அறிந்த ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கௌரி ஸ்டீல் சென்று இரும்பு உருக்கு ஆலையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக தீர்மான நகலை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்றனர். கௌரி ஸ்டில்ஸ் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.