தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில் வேல் முருகன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் திட்டமிடல் இயக்கம் தொழிலாளர் வரவு செலவு திட்டம் நலிவு நிலை குறைப்பு நிதி தூய்மை பாரத இயக்கம் ஊரகம் ஜல் ஜீவன் திட்டம் சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விபரம் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் இதர தலைப்புகளிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து தொழுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்பர்ஷ் தொழு நோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை ஊராட்சி செயலர் வேல் முருகன் தலைமையில் ஊராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர் .