தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் பாராட்டு விழாவை திருச்சியில் நடத்தினர்.
திருச்சி மாவட்டத்தில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு வீடற்ற ஆதரவற்றவர்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை வழங்கியும், உயிரிழந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை மயான பூமியில் மனைவி,மகளுடன் கண்ணியமான முறையில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்றப் பணியினைப் பாராட்டி குடியரசு தினத்தன்று வழங்கப்படும் ஆளுநர் விருதினை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி லோக்பவன் மக்கள் மாளிகையில் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு வழங்கினார்.
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவனத் தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேனாள் சுகாதாரத் துறை தலைவர் தமிழரசி,கார்த்திக் வைத்யஷாலா மருத்துவர் கார்த்திக், ஜே.கே.சி. அறக்கட்டளை தலைவர் ஜான் ராஜ்குமார் முன்னிலையில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை மயான பூமியில் மனைவி,மகளுடன் கண்ணியமான முறையில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.மேலும் அவரது தன்னலமற்ற பணிக்கு உறுதுணையாக இருந்த யோகா ஆசிரியர் விஜயகுமார் மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா உள்ளிட்டோரையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.