கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் எச்.ஜ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா முன்னிலையில் கல்லூரி YRC.RRC.Anti Drug Club சார்பில் எச.ஜ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு இயற்பியல் துறை தலைவர் டாக்டர் எம் தவராணி அனைவரையும் வரவேற்று பேசினார்
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை integrated councelling – Testing centre ஆலோசகர் கே ஏ ராஜா மற்றும் கூடலூர் பிரைமரி ஹெல்த் சென்டர் சமூக ஆர்வலர் கே மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவர்க்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் இளம் வயதில் ஏற்படும் உளவியல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் எச்
ஜ.வி. எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது அதை தடுக்கும் வழிமுறைகளையும் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை முறையாக கண்டுபிடித்து மருத்துவ உதவி பெறுவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும் என்பதையும் விரிவாக மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி கூறினார்கள்
இந்த நிகழ்ச்சி குறித்து மாணவிகள் கூறும்போது இது போன்று விலை மதிக்க முடியாத மனித உயிர் காப்பதற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார்கள் . ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியை ஏ.ஷேக்நஸ்ரின் நன்றி உரையாற்றினார்