கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று காலை சுமார் 8:30 மணியளவில் TN 38 N 3442 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுனர் காளிதாஸ் (56) த/பெ. வேலுச்சாமி (பட்டியல் எண் 18442 என்பவர் வால்பாறையில் இருந்து சோலையார் டேம் பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது டாட்டா எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமானTN 41 H7006 என்ற பதிவு எண் கொண்ட மகேந்திரா டிராக்டர் வாகனத்தில் சுருளி மலையில் இருந்து அனலி எஸ்டேட் பகுதிக்கு காபி கொட்டை பறிக்கும் பணிக்காக 13 தொழிலாளர்களை ஓட்டுநர் விஷ்ணு (44),என்பவர் ஏற்றி சென்றபோது. எதிரே வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்களை ஏற்றி சென்ற டிராக்டர் மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் உருளிகல் எஸ்டேட் பெரியார் நகரைச் சார்ந்த
1)சரோஜா (58),
2) ஜோதி (60),
3) சரோஜா (50),
4)சரஸ்வதி (52),
5) ஜானகி (38) ,
6) நடராஜ் (54),
7) விக்டோரியா (52)
மேற்படி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் 7 நபர்கள் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுள்ள நிலையில் 6 பேர்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் இந்த விபத்தில் சிக்கிய
விக்டோரியா (53) என்பவர் சுய நினைவின்றி இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை சி.எம்.சி.மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து சேக்கல் முடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 29.01.2026