திருச்சி மாவட்டம் துறையூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் வ. மனோகரன் (53) வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் அருகே நின்ற இருவர் அவரிடம் தகராறு செய்து, முகத்தில் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இது குறித்து துறையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து