கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 31.01.2026 அன்று திருக்கல்யாணம் மற்றும் 01.02.2026 அன்று மாபெரும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறுவதை முன்னிட்டு நேற்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது
முன்னதாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து மூலவர் ஆலயத்தை வலம்வந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கொடியேற்றப் பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இவ்விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் துரிதமாக செய்து வருகின்றனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
29.01.2026