கருப்பட்டி விலை குறைவால் உற்பத்தியாளர்கள் கவலை .
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, நரிப்பையூர் வேம்பார் மற்றும் பூப்பாண்டியபுரம் கன்னிராஜபுரம் போன்ற பகுதிகளில் பனைமரங்கள் அதிகம் உள்ளதால், பதநீர் (பனைநீர்) பருவத்தில் பனைமரக்காடுகளில் கருப்பட்டி காய்ச்சும் தொழில் அதிகமாக நடைபெற்று வருகின்றது இதனால் மார்க்கெட் சந்தையில் கருப்பட்டி விற்பனை அதிகரிக்கும் போது விலை மீது அழுத்தம் ஏற்பட்டு விலை சரிவு ஏற்பட்டுள்ளது
கடந்த மாதம் ஒரு கிலோ கருப்பட்டி ரூ. 420 – 450 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த விலையில் ரூ. 320 மற்றும் சில்லறையில் ரூ. 350க்கு விற்பனை ஆகின்றது இது மேலும் விலைகுறைய வாய்ப்பு இருப்பதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்