பெரியகுளம் நகரில் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் உள்ள பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அறிவுறுத்தலின் படி (01.02.2026 ஞாயிற்றுக்கிழமை தேனி வடக்கு மாவட்ட மருத்துவரணி மாவட்ட செயலாளர் டி.பாண்டியராஜ் ஏற்பாட்டில் கைலாசப் பட்டி திரவியம் கல்விக் குழுமம் மற்றும் மதுரை அப்போலோ மருத்துவமனை குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமிற்கான அழைப்பிதழை திரவியம் கல்வி குழும தலைவரும் திமுக வடக்கு மாவட்ட மருத்துவர் அணி மாவட்டச் செயலாளருமான டி பாண்டியராஜ் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்சந்தித்து முகாமில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் மேலும் மருத்துவர் அணி மாவட்டச் செயலாளர் டாக்டர் டி பாண்டியராஜ் கூறும் போது நடைபெற உள்ள மாபெரும் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்கும் பொது மக்களுக்கு உடல் உறுப்புகள் முழுவதும் முழு உடல் பரிசோதனை இ சி ஜி எக்ஸ்ரே சர்க்கரை அளவு ரத்த கொதிப்பு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற அனைத்து விதமான நோய்களும் சிறந்த முறையில் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்து மாத்திரைகள் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாகவும் தேவைப்படுபவருக்கு இருதய ஆபரேஷன் போன்ற உயிர்காக்கும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன இந்த முகாமில் பெரியகுளம் மற்றொரு இதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்