தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஐந்து பேர் சேர்ந்து கைகளால் அடித்தும் கால்களால் வயிற்றில் எட்டி உதைத்தும், மேலும் கம்பி மற்றும் குக்கரால் அடித்து கொடுங்காயம் ஏற்படுத்திக் கொலை செய்துள்ளனர்.
இது பற்றி விஸ்வநாதபுரம் புதுமனை தெரு, பிச்சை வாத்தியார் காம்பவுண்டில் குடியிருந்து வந்த
மும்தாஜின் மருமகன் அப்துல் காதர் (வயது 52) என்பவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் 10. 02. 2020 அன்று இரவு 12:30 மணிக்கு சம்பவம் நடைபெற்றதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும் அமின்ஷா என்பவரின் மகன் அப்துல் சலாம், செங்கோட்டை சாம்பவர் தெருவில் குடியிருந்து வரும் நாகூர் மீரான் என்பவரது மகன் அப்துல் ஜாபர் ( வயது 52) செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும் சேக் மதார் என்பவரின் மகன் காதர் மீர்ஷா (வயது 52) செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும்
அ மீன் சா என்பவரின் மனைவி அமினா (வயது 40) செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும் காதர் மீர்ஷா என்பவரின் மகள் பாத்திமா பீவி (வயது 48) ஆகியோரை கைது செய்தனர்
இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேலு முன்பு விசாரணைக்கு வந்தது இந்நிலையில் நேற்று நீதிபதி இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குதீர்ப்பு வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில்
செங