எஸ் செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்
சீர்காழி வட்டம், திருப்புங் கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

புனராவர்த்தன ஜீர்ணோத்தா ரண அஷ்டபந்தன ரசித் பந்தன ஸ்வர்ண பந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. புங்க மரத்தடியின் கீழே சிவ பெருமான் தரிசனம் கொடுப்பதால் இப்பெயர் வழங்கப் படுகிறது. மூலவர் அம்மன்- சவுந்தரநாயகி, சொர்க்க நாயகி தலவிருட்சம் புங்கமரம். தீர்த்தம் – ரிஷப தீர்த்தம், தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம்
மழைப்பொழிய வைத்த ஈசன்
ராஜேந்திரசோழன் தன் நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதால் எல்லாச் சிவாலயங்களிலும்பூஜைகளைச் செய்தார். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புங்கூர் சிவலோகநாதரை வழிபட்டால் மழைப்பொழிவு உண்டாகும் என்று கூறினார்.
அப்போது மன்னனும் திருப்புங்கூர் வந்து சுவாமியை வழிபட்டான் சுந்தரர் அங்கு வந்தார். மன்னன் அவரை வணங்கி மழை வரச்செய்யுமாறு வேண்டி னான், சுந்தரரும் மழை வரவழைத்தால் சுவாமிக்குப் பன்னிரு வேலி நிலமளிக்க வேண்டும் என்று மன்னனுக்கு கட்டளை யிட்டு விட்டுப் பாடினார். மழை பெய்தது.
எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை அதிகமாக பெய்வதைக்கண்ட மன்னன் அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து மழை போதும் என்று கூறினார். சுந்தரர் கோயிலுக்கு பன்னிருவேலி நிலம் கேட்டார். மன்னனும் உடனே தர, சுந்தரரும் இறைவனை பாடினார். மழையும் நின்றது.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்திட முடிவு செய்யப்பட்டு ஒரு சமய அறநிலையத்துறை மற்றும் குபேதாரர்களால் பங்களிப்புடன் திருப்பணிகள் ரூபாய் 2 கோடி மதிப்பில் நடைபெற்று வந்தது கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட சுவாமி அம்பாள் சன்னதி கோபுரங்கள் விமான கலசங்கள் பிரகாரங்கள் மேல் தளம் உள்ளிட்ட அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
இதனை அடுத்து ஆறு காலையாக சாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது விழா அன்று ஆறாம் காலையாக சாலை பூஜை நூறாவது மகா தீபாரனை நடைபெற்று தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நீர் அடங்கிய கடன்கள் மேல தாளம் உள்ளங்க வேத விற்பனர்கள் மந்திரம் ஓதிட கோயிலை வலம் வந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட கண்ணேதி விமான களத்துங்கள் ராஜகோபுரம் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.