தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாலுகா அலுவலகத்தில் 79 ஆவது காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதி மொழியை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஏற்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அண்ணன் காந்தியடிகளின் 79வது நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
மேலும் அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை கடைப்பிடிக்க மாட்டேன் என்று உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் ,திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம், தாசில்தார் ராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து தாராபுரம் போலீஸ் நிலையத்தில் தாராபுரம் டிஎஸ்பி குமார் தலைமையில் போலீஸ் நிலையத்தில் தீண்டாமை உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு உறுதிமொழியை ஏற்றனர்.