தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழா 2026 வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சண்முகசுந்தர் தனி வட்டாட்சியர் ஆதி திராவிட நலம் சரவணபாபு ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்