கோவையில் ‘பள்ளிகளுக்கு இடையேயான மறுசுழற்சி சாம்பியன்ஷிப்’ போட்டி

கோவையை சேர்ந்த பள்ளி 9.3 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வழிவகுத்து கோப்பையை வென்றது

ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் மறுசுழற்சி செய்யக்கூடிய தன்மை கொண்ட உளர் கழிவுகளை மேலாண்மை செய்ய ஊக்குவிக்கும் வாவ் திட்டம் கீழ் நடைபெற்ற ‘பள்ளிகளுக்கு இடையேயான மறுசுழற்சி சாம்பியன்ஷிப்’ போட்டியில் கோவை காளப்பட்டியில் இயங்கும் அம்ரிதா பள்ளி 9.3 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வழிவகுத்து கோப்பையை தட்டி சென்றது.

முறையான கழிவு வகைப்பிரிப்பு, மறுசுழற்சி மற்றும் பொறுப்பான கழிவு மேலாண்மை நடைமுறைகள் மூலம் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் மாணவர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பை இந்த விழா அங்கீகரித்துக் கொண்டாடியது. இது இன்று கோயம்புத்தூர், நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கோயம்புத்தூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. சங்கத் பல்வந்த் வாக் அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை தந்து சிறப்பித்தார்.

ஐடிசி பேப்பர் போர்டு மற்றும் ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ் பிரிவின் கோவை யூனிட் தலைவர் திரு. வி.முரளி, இதே பிரிவின் துணைப் பொது மேலாளர் திரு. எஸ்.என். உமாகாந்த்; ஐடிசி வாவ் மேலாளர் திரு. பெஞ்சல ரெட்டி; ஐடிசி பேப்பர் போர்டு பிரிவின் மனித வளத்துறை தலைவர் மற்றும் தலைமை மேலாளர் திரு. ஜி.மகிதர் பாபு மற்றும் கோவை மண்டல ஐ.டி.சி வாவ் திட்டத்தை செயல்படுத்தும் பங்காளரான ராக் அமைப்பின் தலைவர் திரு. சி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐடிசி வாவ் திட்டத்தின் முதன்மை நிகழ்வான ‘பள்ளிகளுக்கு இடையேயான மறுசுழற்சி சாம்பியன்ஷிப்’, வருங்கால குடிமக்களிடையே பொறுப்பான கழிவு மேலாண்மை விழுமியங்களை விதைக்கும் ஒரு வலிமையான தளமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை கழிவு வகைப்பிரிப்பு மற்றும் மறுசுழற்சி முயற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்க ஊக்குவிப்பதன் மூலம், சிறு வயதிலிருந்தே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் நிலைத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை வளர்க்கிறது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 220 பள்ளிகள் இதில் பங்கேற்றன. சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் கழிவு வகைப்பிரிப்பு மற்றும் பொறுப்பான கழிவு அகற்றல் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் ஈடுபட்டனர்.

ஐ.சி.எஸ்.இ, சி.பி.எஸ்.இ மற்றும் எஸ்.எஸ்.சி என பல்வேறு கல்வி வாரியங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்தது, இத்திட்டத்தின் உள்ளடக்கிய அணுகுமுறையையும் அடிமட்ட அளவிலான வலுவான தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

சமூகத்தால் வழிநடத்தப்படும் ஒரு முன்முயற்சியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஐடிசி வாவ் திட்டம், இன்றுவரை ஆறு மாநிலங்களில் 74 லட்சம் வீடுகளையும் 77 லட்சம் மாணவர்களையும் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் 17,900-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பாளர்கள் வாழ்வாதார ஆதரவு மற்றும் முறைப்படுத்தப்பட்ட பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் 65,000 மெட்ரிக் டன் உலர் மறுசுழற்சி கழிவுகளை மீட்டு, சுழற்சிப் பொருளாதாரத்தை இத்திட்டம் வலுப்படுத்துகிறது. கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூரில் மட்டும் இத்திட்டம் 225 வார்டுகளில் உள்ள 6.5 லட்சம் வீடுகளை உள்ளடக்கி, சமூக ரீதியிலான நிலைத்தன்மை நடைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *