நாமக்கல் பரமத்தி வேலூர்.

பாண்டமங்கலம் கொளக்காட்டு புதூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னோட்ட பிரச்சார வியூகத்திற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வரும் 2026 க்கான அதிமுகவின் அதிரடி முதல் ஐந்து தேர்தல் அறிவிப்புகளை பொதுமக்களிடையே வழங்கி திமுகவின் நிர்வாக திறன் அற்ற ஆட்சியில் அவலங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டமங்கலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஒன்றிய, நகர செயலாளர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு இடையேயான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால சாதனையை பொதுமக்களிடையே கொண்டு சென்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர முழுமையாக கட்சிப் பணிகளில் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என கூறினார்.

பின்னர் வீடு வீடாக சென்று அதிமுகவின் சாதனைகளையும் விடியா திமுக அரசின் சோதனைகளையும் பட்டியலிட்டு பொதுமக்களிடையே விளக்கம் கேட்டார்.

இதில் வீட்டு வரி, குடிநீர் வரி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், மின் கட்டணம், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பொதுமக்களிடையே விளக்கம் கேட்டார்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததை விட தற்போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வரிச்சுமைகள் பன்மடங்காக உயர்ந்திருப்பதாக தெரிவித்தனர்.

இதனை பொதுமக்கள் முன்னிலையில் பயனீட்டு கருவி மூலம் கணக்கிட்டு திமுக ஆட்சியின் கடந்த நான்கரை ஆண்டுகளில் பொதுமக்களுக்கு எவ்வளவு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டி காட்டி விளக்கமளித்தார்.

இதனை பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒன்றிய நகர கழக கிளைகளாக நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர் தலைமையில், தேர்தல் முன்னோட்ட பிரச்சார வியூகத்திற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த மாவட்ட செயலாளர் முரளி மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் மற்றும் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராகா தமிழ்மணி, முன்னாள் ஆவின் சேர்மன் ராஜேந்திரன், பொருளாளர் கண்ணன் மற்றும் பொத்தனூர் நகர செயலாளர் எஸ்.எம் நாராயணன் பரமத்தி நகர செயலாளர் சுகுமார் வேலூர் நகர செயலாளர் பொன்னி வேலு பாண்டமங்கலம் நகர செயலாளர் செல்வராஜ், பரமத்தி வடக்கு,தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ரவி,வெற்றிவேல், கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *