திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணிதத் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
முதல் நாள் தொடக்கவிழா நிகழ்வில் கணிதத் துறை தலைவர் முனைவர் வ.சந்திரசேகர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் கருத்தரங்கை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக, எகிப்து நாட்டை சேர்ந்த முனைவர் எசாம் நோபெல், அண்ணாமலை பல்கலைக்கழகம் ,சிதம்பரம் மற்றும் உதவிப் பேராசிரியர், முனைவர் எம்.சீனுவாசன், திருச்சி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கணிதத் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்லூரி முதல்வர் கருத்தரங்கத்தின் மலரை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்களும் பங்கு பெற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் கணிதத் துறை பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இறுதியில் கணிதத்துறை கௌரவ விரிவுரையாளர் கிருபாவதி நன்றி கூறினார். பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *