வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பல வண்ண பூக்கள் மற்றும் பழங்களை வைத்து எழுந்தருளிய சந்திரசேகரர் திரிபுரசுந்தரி தாயார்
ஏராளமான பக்தர்கள் தெப்ப திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
கோயில் உதவி ஆணையர் நற்சோனை சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் இதில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்ஆதிசேஷ தீர்த்த குளத்தில், உற்சவர் சந்திர சேகரர் – திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
அதிகமழை பெய்து, குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது. அதன்படி, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளத்தில், 12 படிக்கட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கி, தெப்பம் விட ஏதுவாக இருந்தது.
இதையடுத்து, தெப்போற்சவம் 20க்கு 20 என்ற அடியில் தெப்பம் தயார் செய்தனர் . உற்சவர் சந்திரசேகரர் – திரிபுரசுந்தரி அம்மன் விசேஷ மலர் அலங்காரத்தில், மங்கள வாத்தியம் கயிலாய வாத்தியங்கள் முழங்க, தியாகராஜ சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர்.
பின், பஞ்ச தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர், நீராழி மண்டபத்தை ஐந்து முறை வலம் வந்தனர்.
அப்போது, கூடியிருந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘தியாகேசா ஒற்றீசா…’என விண்ணதிர முழங்கினர். தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமியை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர், தியாகராஜ சுவாமி பிரமாண்ட மலர்அலங்காரத்தில் எழுந்தருளி, சாம்பிராணி துாப மிட, கையிலாய வாத்தியங்கள் முழங்கிட, மாடவீதி உலா உற்சவம் வந்தார்.
இந்த தெப்ப உற்சவத்தில் சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வரிசைப்படுத்தி மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது