கம்பம் நகர அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு அனுஷ்டிப்பு
தேனி மாவட்டம் கம்பம் நகர வடக்கு அண்ணா திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு அண்ணா திமுக வடக்கு நகரச் செயலாளர் எம்.ஆர். கார்த்திகேயன் முன்னிலையில் கம்பம் சிக்னல் அருகே மேடையில் வைக்கப் பட்டிருந்த அண்ணா திருவுரு படத்துக்கு அண்ணா திமுக அமைப்புச் செயலாளர்,
தேனி மேற்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி உறுப்பினர் எஸ். டி.கே ஜக்கையன் பேரறிஞர் அண்ணா நினைவை போற்றுகின்ற வகையில் அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் 6 ஆவது வார்டு நகர் மன்ற கவுன்சிலர் வண்டு முருகன் உள்பட நகர அண்ணா திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்