இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் மடப்புரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பெருவிழா
திருவாரூர் மடப்புரத்தில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த சிவனும் பிரம்மாவும் ஒருங்கிணைந்த ஆலயமாக திகழும் அருள்மிகு பிரனாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் அருள்மிகு ஸ்ரீ சரஸ்வதி தேவி உடனுறை பிரம்மா ஆலயத்தில் நேற்று 05.11. 2025 புதன்கிழமை பிற்பகல் அன்னாபிஷேகம் நடைபெற்று மாலை திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் கலசம் வைத்து பூஜை செய்து வேத மந்திரங்கள் முழங்க கலச நீரை பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து பின் அலங்காரத்துடன் மங்கள தீபாரதனை மற்றும் அருட்பிரசாதம் மற்றும் அன்ன பிரசாதம் காய்கறிகள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.