திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் 8486 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன இதில் 376 பல்கலைக்கழக மாணவிகளுக்கு தமிழ் நாடு ஆளுனர் மேதகு ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்,58 மாணவிகளுக்கு முனைவர் பட்டமும் 19 மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களும் வழங்கப்பட்டது
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கலா சேதுபதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார் 2024-25 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக சாதனைகளை சிறப்பித்துக் கூறினார்,
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜெயபிரியா தேர்வு கட்டுபாட்டு அதிகாரி முனைவர் கிளாரா தேன்மொழி, நிதி அலுவலர் முனைவர் ஹெனா ஷரன், பேராசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழாவிற்க்கு சிறப்பு சேர்த்தனர்.