வேகத்தடை அமைக்ககோரிக்கை கமுதியில் இருந்து கோட்டைமேடு மதுரை சாலையில் கடந்த வாரம் நடைபெற்ற குருபூஜை விழாவின் காரணமாக கமுதி எட்டுக்கண் பாலத்தில் இருந்து கோட்டைமேடு வரை உள்ள பல வேகத்தடைகள் அகற்றப்பட்டு உள்ளது.
தினமும் இப்பகுதியில் பயணம் செய்யும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோ போன்ற வாகன ஓட்டிகள் தங்களை அறியாமல் வாகனங்களில் பிரேக் அப்ளை செய்து மெதுவாக செல்கின்றனர்.
அதனால் புதிதாக இந்த சாலையை பயன்படுத்துவார்கள் பின்னால் வந்து இடித்து விபத்து ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே மீண்டும் வேகத்தடைகளை நெடுஞ்சாலை துறையினர் அமைக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்